அடமானம் வைத்த நகையில் மோசடி.. களத்தில் இறங்கிய வாடிக்கையாளர்கள்.. வங்கிக்கு படையெடுத்த மக்கள்

Update: 2024-06-30 15:00 GMT

திருப்பத்தூரை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த நாராயணகுமார் என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளில் உள்ள பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக நாராயணகுமார் திருடியதாக கூறப்படுகிறது. அவர், 11 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வங்கி மேலாளர் சரத்குமார், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து நாராயணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் ஒருவர் சந்தேகம் எழுப்பி அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி உயரதிகாரிகள், கடந்த 10 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அழைத்து ஆய்வு செய்ததில், இந்த மோசடி அம்பலமாமானது. இந்நிலையில், அந்த வங்கியில் நகை வைத்த வாடிக்கையாளர்கள், வங்கி முன்பு திரண்டு, தங்கள் நகைகளின் எடை குறைந்துள்ளதாக கூறி முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்