சென்னை ரயில் வே வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2023-10-14 02:39 GMT

சென்னை ரயில்வே கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில், 4 ஆயிரத்து 404 பயணிகள் உரிய டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் செய்திருப்பது தெரிய வந்தது.

உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இன்று ஒரே நாளில் 20.19 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் இன்று ஒரே நாளில் 539 டிக்கெட் பரிசோதகர்கள் பல்வேறு வழித்தடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஆயிரத்து 934 பேர் பயண சீட்டு இல்லாமலும், ஆயிரத்து 832 பேர் உரிய பயண சீட்டு இல்லாமலும், 20 நபர்கள் லக்கேஜ் டிக்கெட் இல்லாமலும் சென்றது தெரியவந்தது. அதோடு, 618 பேர் புகைபிடித்தல் மற்றும் ரயில்வே விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் டிக்கெட் எடுக்காதவர்களிடம் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், உரிய பயண சீட்டு இல்லாதவர்களிடம் 8 லட்சத்து 41ஆயிரம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்