திருமணமான 4 மாதத்தில் கணவன், மனைவி விபரீத முடிவு சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-10-04 15:17 GMT

தாம்பரம் அடுத்த பெருங்குளத்தூர் புத்தர் தெருவில் வசித்து வந்தவர் காயத்ரி. 25 வயது இளம் பெண்ணான இவர், சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான முதலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று வீட்டிற்குள் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணி முடிந்து வீடு திரும்பிய சரவணன், மனைவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டிற்குள் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றிய நிலையில், அதில் தனது கணவருடனான கருத்து வேறுபாட்டில் எவ்வளவு பேசினாலும் அவர் புரிந்து கொள்ளவில்லை எனவும், இனி கணவருடன் வாழ முடியாது எனவும் காயத்ரி குறிப்பிட்டிருந்த நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்