கடலூர் மாவட்டம் அடரியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்றிரவு, ஒன்பதாம் வகுப்பு செயல்படும் வகுப்பறை கட்டத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதேபோல் பள்ளிக் கட்டடத்தின் பிற பகுதிகளிலும் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன், கட்டடம் மிக பலவீனமாக காணப்படுவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதனால் அச்சத்துடன் பள்ளிக்கு வர வேண்டியுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பழுதடைந்த கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் அமைத்து தரவேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.