உத்தரவை மதிக்காத தமிழக டிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Update: 2024-06-16 03:23 GMT

ரவுடி பட்டியல் விவகாரத்தில் தமிழக டிஜிபி மீது தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உரிய பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னை ரவுடிகள் பட்டியயில் இருந்து நீக்கவும், மாநிலம் முழுவதும் ரவுடிகள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்து மாவட்ட வாரியாக குழு அமைத்து வழிகாட்டுதல்களை வெளியிடக்கோரி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மதிக்காத தமிழக காவல் துறை இயக்குனர் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை குறித்து தமிழக காவல் துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்