துண்டான தலை... ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல் தஞ்சையை அதிர வைத்த கும்பல்

Update: 2023-11-02 06:41 GMT

தஞ்சை அருகே, தாதாவாக வலம் வருவதில் ஏற்பட்ட போட்டியில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருக்காட்டுப் பள்ளி அடுத்த திருச்சென்னம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தாதாவாக வலம் வருவதில், இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குமாரை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில், தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்