உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-07-19 09:27 GMT

ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 250 பேர் 5 மண்டலங்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், அடுத்த மாதம் அறுபடை வீடுகள் பயணம் தொடங்க உள்ளதாகவும், அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் கூறினார். அறுபடை வீடுகளை 3D வடிவில் வடிவமைத்து அருகில் முருகனை பார்ப்பதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்