சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, திருநங்கைகள் படுத்து உருண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹரிகிருஷ்ணன் என்ற திருநங்கை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், நாகினி என்பவரை தாயாக தத்தெடுத்து வாழ்வதாகவும் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் ரவுடிகளுடன் வந்து கொலை மிரட்டல் விடுவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர்.