கணவனை அடித்தே கொன்ற கள்ளக்காதலன்... தகாத உறவு வெறியால் தெறித்த ரத்தம்

Update: 2024-08-08 17:57 GMT

சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி ராமசாமி-ஜெயா. லாரி ஒட்டுநராக வேலை பார்த்து வரும் ராமசாமி வேலைக்கு செல்லும் நேரங்களில் பக்கத்து வீட்டில் இருந்த முருகன் ஜெயாவுக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார். நாளடைவில் முருகனுடன் ஜெயாவுக்கு தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதனையறிந்த ராமசாமி முருகனை எச்சரித்ததுடன், ஜெயாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீடு புகுந்து சரமாரியாக ராமசாமியை தாக்கி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த ராமசாமி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பலியானார். இதனை தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்