மூதாட்டி உடலை மயானத்திற்கு செல்லவிடாமல் தடுத்த கிராம மக்கள்.. சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம்
சேலம் மாவட்டம் அகராதிபட்டினம் கிராமத்தில் 80 வயதான மூதாட்டி ஐயம்மாள், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்ற போது வழக்கமாக மக்கள் பயன்படுத்தும் பாதையை ஒரு தரப்பினர் அடைத்து தடை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இதற்கு தீர்வு காணும் வரை உடலை எடுக்க மாட்டோம் என மூதாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதாட்டி உறவினர்களை எதிர்த்தரப்பினர் கத்தியால் தாக்கியதாகவும், இதில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்த போலீசார், உடலை அடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.