தமிழகத்தில் நடந்த வித்தியாச மாற்றம்.. நரகத்தில் உருவாகும் சொர்க்கம்.. இதுவே முதல்முறை..
சிறைவாசிகளின் மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களைத் தடுக்கும் புதிய முயற்சியாக, நம்பிக்கை வார்த்தைகளை ஒலிக்கும் "சிறைப்பண்பலை" குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த செய்தித் தொகுப்பில்..பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சேலம் மத்திய சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள், தடுப்பு காவல் கைதிகள் என 1000-க்கும் மேற்பட்டோர் சிறைவாசிகளாக உள்ளனர்.. பொதுவாகவே, சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு செயல்பாடுகளில் அவர்களை பங்கேற்க வைக்கும் நடவடிக்கையில் சிறைத்துறை ஈடுபட்டு வருகிறது.. இது தவிர, சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும்போது, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழிற்பயிற்சி வழங்கும் பணிகளையும் கையில் எடுத்துள்ளது, சிறைத்துறை..அந்த வகையில், சேலம் மத்திய சிறையில் "சிறைப்பண்பலை" என்ற FM-ஐ சிறைத்துறை டிஜிபி மகேஸ்வரர் தயாள் தொடங்கி வைத்துள்ளார். சிறைவாசிகளுக்காக FM தொடங்கப்படுவது, தமிழ்நாட்டில் இதுவே, முதன்முறை ஆகும்...இந்த சிறைப்பண்பலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட உள்ளன. அதன்படி, காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகிறது. மனநல ஆலோசனைகள், மருத்துவம், கருத்துள்ள திரை இசைப்பாடல்கள் உள்ளிட்டவை இசைக்கப்படும்..ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 மணி - 7.45 மணி வரை சிறைவாசிகளின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஒலிபரப்பப்படும்..நிகழ்ச்சியின் மூலமாக சிறைவாசிகள் எழுதும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகள் விடுதலைக்குப் பிறகு செய்யக்கூடிய மறுவாழ்வு மற்றும் தொழில் சார்ந்த "விடுதலைக்குப்பின்" என்ற நிகழ்ச்சி நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்படும்..சிறை என்பது மனதிற்கு எப்போதும் இல்லை.. மனதில் ஆழப் பதிந்த எதிர்மறையான எண்ணங்களைத் தொலைக்கும் நேரம் இது.. சிறைக்கைதிகளின் மனதில் மகிழ்ச்சியை ஒலி வடிவமாக தர இருக்குறது, இந்த சிறைப்பண்பலை..