சிறையிலிருந்து வெளியே வந்த மறுகனமே மீண்டும் கைதான மகன்... சிறை வாசலிலேயே கதறும் தாய்

Update: 2024-06-23 10:32 GMT

சிறையிலிருந்து வெளியே வந்த மறுகனமே மீண்டும் கைதான மகன்... சிறை வாசலிலேயே கதறும் தாய்

"என் மகன் கொள்ளை அடித்தால்

நான் ஏன் ஏழையா இருக்கேன்"

சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்த 4 பேரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்ததால் அவர்களின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேலம் மத்திய சிறை வாசல்...ஏன் இவ்வளவு பரபரப்பு?...வழக்கத்திற்கு மாறான பதற்றம் ஏன்?...

சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த மறுகணமே 4 இளைஞர்கள் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டது தான் இத்தனை களேபரத்திற்கும் காரணம்...

கோவை சரவணம்பட்டியில் பிரபல ரவுடிகளாக அறியப்படுபவர்கள் பிரசாந்த், அமர்நாத், ராஜேஷ், பிரவீன்... இவர்கள் 4 பேர் மீதும் கொலை, கஞ்சா வழக்குகள் பல நிலுவையில் உள்ளன...

கடந்த ஆண்டு இந்த 4 பேரும் கஞ்சா வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் பிணை வழங்கியதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே நால்வரையும் மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்...

4 பேரையும் அழைத்துச் செல்ல வந்த உறவினர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென கதவைத் தள்ளிக் கொண்டு கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழைய முயன்றனர்...

அது பயனளிக்காத நிலையில், திடீரென உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத் துவங்கினர்...

மறியலால் சேலம் அஸ்தம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே போலீசார் அவர்களை தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்த முயன்றனர்...

போராட்டம் நடத்தியவர்களை அவ்விடத்தை விட்டு அகற்ற முயன்றபோது பெண் காவலர் ஒருவர் திடீரென தடுமாறி சாலையில் விழுந்ததால் பரபரப்பு நிலவியது...

இதற்கு முன்பாக போடப்பட்ட கஞ்சா வழக்கை பொய் என நிரூபித்து விட்டதாகவும், இந்த சூழலில் எந்தஒரு காரணத்தையும் சொல்லாமல் எப்படி போலீசார் எங்கள் பிள்ளைகளைக் கைது செய்யலாம் என அவர்கள் கடுமையாக கொந்தளித்தனர்...

என் மகன் தவறான வழியில் சம்பாதித்திருந்தால் நாங்கள் ஏன் ஏழ்மை நிலையில் இருக்கப் போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் ஒரு தாய்..

இத்தனை பதற்றத்தையும் மீறி போலீசார் கைது செய்த 4 பேரையும் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்... கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது...

Tags:    

மேலும் செய்திகள்