சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சங்ககிரி அருகே காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தேவூர், சங்ககிரி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி கரையோரம் உள்ள புள்ளாக்கவுணம்பட்டி, காவேரிப்பட்டி நீரற்று நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது