பொறுத்து பொறுத்து... பொங்கி எழுந்த பெண்கள்.. களேபரமான கலெக்டர் ஆபீஸ் - பரபரப்பு காட்சி

Update: 2024-08-12 13:15 GMT

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்கள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் சென்ற தாரமங்கலத்தை சேர்ந்த ஜோதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடு முன் உள்ள வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி தர பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும், பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஆட்சியரிடம் பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்