ரஷ்யாவுக்கு நண்பனா? இந்தியர்களுக்கு எதிராக இறங்கிய அமெரிக்கா
ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு உதவும் வகையில் செயல்பட்டதாக 19 இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குகின்றன என்றும், அதனை ரஷ்யா, உக்ரைன் போரில் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.