சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - தடா இடையே செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. ஏப்ரல் மாதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு தேர்தல் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. கார்களுக்கு 75ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 120 ரூபாயில் இருந்து 125 ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 255 ரூபாயில் இருந்து 265 ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 280 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 400 ரூபாயில் இருந்து 415 ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 490 ரூபாயில் இருந்து 505 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.