லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்
ரூ.21.29 கோடி கடனை திருப்பி செலுத்தாத விவகாரம் தொடர்பாக லைகா தொடர்ந்த வழக்கு
வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது
ரூ.15 கோடி செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவையும், சொத்து விவரங்களை சமர்ப்பிக்க பிறப்பித்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை என லைகா குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம்
விஷாலின் நான்கு வங்கி கணக்குகளி. 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்களௌ ஆவணங்களுடன் செப்டம்பர் 19 தாக்கல் செய்ய உத்தரவு
மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவு
அடுத்தமுறை விஷால் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவு