பெயருடன் `குரங்கு'-ஐ சேர்த்த போலீசார்... கண் சிவந்த நீதிபதி... போலீசாருக்கு பறந்த அதிரடி உத்தரவு

Update: 2024-03-08 14:15 GMT

வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அடைமொழி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ல், சூளைமேடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்கியதாக சரவணன் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, முதல் தகவல் அறிக்கையில் குரங்கு சரவணன் என குறிப்பிட்டதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

போலீசார் மரியாதை குறைவான பெயர்களை வைக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி,

இதுபோன்ற அடைமொழிகளை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை பறிப்பதாக தெரிவித்தார்.

மேலும், அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்,

அதற்கான உரிய அறிவுறித்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்