மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிக்க 100 பவுன் சொந்த நகையை தானே திருடி அம்பலப்பட்ட கணவன்

Update: 2024-08-01 12:04 GMT

அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது வீட்டில், இரண்டு தினங்களுக்கு முன் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவியை ஆராய்ந்த போது ஒரு நபர் கள்ளசாவி போட்டு கதவை திறந்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்ற நிலையில், உரிமையாளர் ஜனார்த்தனன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியானது. மனைவி கோகிலாவின் நகையை அடமானம் வைத்து ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 40 சவரன் இழந்துவிட்டதாகவும், இதனால், தனது மனைவியிடம் தப்பிப்பதற்காக உறவினர் தியாகராஜனை வைத்து 100 சவரன் நகையை கொள்ளையடித்ததாக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்