இன்று ஆளுநர் வருவாரா? விறுவிறுவென வந்த ஈபிஎஸ்.. சட்டப்பேரவையை தொற்றிய திடீர் பரபரப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள சட்டப்பேரவை
காலை 9.57 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை வளாகத்துக்கு வர உள்ளார்
சட்டசபை வளாகத்தில், ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்
சட்டப்பேரவை வரும் ஆளுநரை, சபாநாயகர் அப்பாவு வரவேற்று உரை நிகழ்த்த அழைப்பார்
சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன், கூட்டம் தொடங்குகிறது
10.02 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரையாற்றுவார்
ஆளுநர் உரையாற்றிய பின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்
இன்று பிற்பகலில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம்
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும்
கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் பல பகுதிகளை தவிர்த்து பேசியதால் சர்ச்சை எழுந்தது
கடந்த ஆண்டு சற்று நேரத்தில், அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்
கடந்த ஆண்டு ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக காலை 9.57 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை வளாகத்துக்கு வருவார்.
அவரை சிவப்புக் கம்பளம் உள்ள பகுதியில் சபாநாயகர் அப்பாவு வரவேற்று உரை நிகழ்த்த அழைப்பார். ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்..
ஆர்.என்.ரவி உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்