பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்? - செய்தி கேட்டதும் ஓடி வந்த ஆர்.பி உதயகுமார்

Update: 2024-09-14 02:07 GMT

மதுரை அருகே திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இதேபோல் திமுகவினர் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்