ஒரு நொடி கண்முன் வந்த வயநாடு...நடுங்கவிட்ட நாமக்கல் போகர் மலை - காதை கிழித்த அதே அதிகாலை சத்தம்

Update: 2024-08-12 08:50 GMT

ஒரு நொடி கண்முன் வந்த வயநாடு

நடுங்கவிட்ட நாமக்கல் போகர் மலை

காதை கிழித்த அதே அதிகாலை சத்தம்

ராசிபுரம் அருகே, போகர் மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறைகள், மலையடிவார கிராம மக்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்படுத்திய காயத்தின் ரணங்கள் இன்னமும் ஆறாத நிலையில், போகர் மலையில் பாறைகள் சரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே போகர் மலை அமைந்துள்ளது. இங்கே மூன்று மலை கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், பாதை அமைத்து தர கோரி பல ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்பட்டன.

தற்போது பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளி கிழமை கனமழை பெய்த மறுநாள் அதிகாலையில், ராட்சத பாறைகள் உருண்டு மலையில் இருந்து கீழே விழுந்திருக்கின்றன.

மலையில் ஏராளமான மரங்கள் இருந்ததால், பாறைகள், மரங்களை வேரோடு சாய்த்து அப்படியே நின்று கொண்டன.

மரங்கள் மட்டும் இல்லை என்றால் மலையின் அடிவாரத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வுக்கு காரணம் மழையா? அல்லது மலையில் ஏதாவது அதிர்வு ஏற்பட்டதா என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்