ஒரே ஊருக்கு 2 MLA, 4 ஊராட்சி தலைவர், 4 VAO... தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா!?

Update: 2024-10-05 06:44 GMT

தங்கள் கிராமத்திற்கு வி.ஏ.ஓ யார்... ஊராட்சிமன்ற தலைவர் யார் என்பது தெரியாமலும், அடிப்படை வசதிகள் வந்து சேராமலும் தத்தளித்து வருவதாக ஒரு கிராம மக்களே கதிகலங்கி போயிருக்கின்றனர்.

கிராமத்தில் இருப்பதே நான்கு தெருக்கள் தான்..

இந்த நாலு தெருக்களும் நாலு ஊராட்சியில் இருப்பதால், கிராமத்திற்கென தனி ஊராட்சி இல்லாமல் மக்கள் புதுவிதமான சிக்கலை சந்தித்திருக்கின்றனர்...

இதனால், தங்களின் அடிப்படை உரிமைகளும், தேவைகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை என புலம்புகின்றனர் கிராம மக்கள்...நாலு தெருவுக்கு நாலு ஊராட்சி என்ற சோகத்துக்கு மத்தியில், இந்த நாலு தெருக்களும் 2 சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறதாம்..

கிராமத்திற்கென தனி சுடுகாடு இல்லை... ரேசன் கடை இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் மக்கள்..நாலு தெருவுக்கு, நாலு தலைவர்கள் இருப்பதால், முறையான கவனிப்பும், கண்காணிப்பும் இன்றி.. பேருந்து வசதி கூட இல்லாமல் தத்தளிப்பதாக தெரிவிக்கின்றனர்...

இருக்கும் பிரச்சினைகளுக்கு நடுவே, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த இடையந்தாங்கல் கிராம மக்களின் இந்த பிரச்சினை மக்களை கதிகலங்கச் செய்திருக்கிறது..

இந்நிலையில், தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்