நாட்டை உலுக்கிய பெண் டாக்டர் கொலை... ராமநாதபுரம் GH-ல் முதன்முறையாக அதிரடி மாற்றம்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளங்களிலும் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு வாக்கி டாக்கி முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு 23 பாதுகாவலர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.