பொதுப்பாதையை ஆக்கிரமித்த தனிநபர்கள்...பொங்கி எழுந்த பெண்கள்... பயங்கர மோதல்.. பரபரப்பு காட்சிகள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பாதையை அகற்றும்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. முகிழ்தகம் பெரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையை அடைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஆக்கிரமிப்பை அகற்றியபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.