விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-02-22 16:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் ஆலய குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கிய நிலையில், இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சிதம்பரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆரணி பெரியபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவன், பார்வதி வேடமணிந்து பக்தர்கள் நடனமாடிய நிலையில், ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை வசந்தீஸ்வரர் கோயில், பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்