"இனியாவது மதுக்கடைகளை அரசு மூடுமா?" - ராமதாஸ் பரபரப்பு கேள்வி
மது உற்பத்தி, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை சுட்டிக் காட்டியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்திய அரசை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும் என கூறியுள்ளார். இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.