ராஜபாளையம் டூ சென்னை... மீட்பு பணிக்காக ஓடோடி வந்த ஊழியர்கள்... கடைசியில் நேர்ந்த சோகம்
புயல் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு வந்த ராஜபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் நகராட்சி துப்புறவு ஆய்வாளர் ஜெயபால் மூர்த்தி மற்றும் துப்புறவு ஊழியர்களான பழனிகுரு, முருகானந்தம் ஆகியோர் காரில் சென்னைக்கு வந்துள்ளனர். விக்கிரவாண்டி அருகே வந்துகொண்டிருந்த போது, சாலையோர மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் ஜெயபால் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகாணந்தம் மற்றும் பழனிகுரு ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.