மே 2இல் உச்சமடைந்த தமிழகத்தின் மின்சார தேவை,
மழை பொழிவினால் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தின் மின்சார தேவை, மே 2ஆம் தேதி 20 ஆயிரத்து 830 மெகா வாட்டாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. மே முதல் வாரத்தில் மாலை நேரங்களில் உச்சபட்ச மின்சார தேவையின் அளவு 18 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து 18 ஆயிரத்து 958 மெகா வாட் வரை இருந்தது.மே 18இல் உச்சபட்ச மின்சார தேவையின் அளவு 15 ஆயிரத்து 555 மெகா வாட்டாக குறைந்து, மே 19இல் 13 ஆயிரத்து 663 மெகா வாட்டாக சரிந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.தமிழகத்தின் அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த திறன் 15 ஆயிரத்து 197 மெகா வாட்டாக உள்ள நிலையில், நிகர மின் உற்பத்தி 12 ஆயிரத்து 917 மெகா வாட்டாக உள்ளது.குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் மின்சார
சந்தைகள் மூலம் தமிழக மின்சார வாரியம் மின் பற்றாகுறையை ஈடுசெய்து வருகிறது.மார்ச் முதல் மே வரையில் மின்சார கொள்முதல் செய்ய
2 ஆயிரத்து 754 கோடி ரூபாய் செலவு செய்ய, தமிழக மின்
வாரியத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
சமீபத்தில் அனுமதியளித்துள்ளது.