சென்னை மாதவரம் அருகே நான்கு நாட்களாக வெள்ளம் வடியாததால் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 15ம் தேதி கொட்டித்தீர்த்த கன மழையால், மாதவரம் அடுத்த விளாங்காடுப்பாக்கத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைப்பொழிவு குறைந்த பிறகும், நான்கு நாட்களுக்கு மேலாக மழைநீர் வடியாததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அந்த பகுதியில் கால்வாயை முறையாக பராமரிக்காதததே இதற்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.