சென்னை மாநகரின் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, மெரினா உள்ளிட்ட பகுதியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்றனர். இதனிடையே, காலை 10 மணி வரை சென்னையில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.