கொட்டி தீர்த்த கனமழை - "வீட்டில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது" செய்வதறியாது தவிக்கும் மக்கள்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. இதன் காரணமாக, முத்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் விஜி ராவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் குளம் போல தேங்கியிருப்பதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்...