ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள கொடிக்கம்பம், தேசிய கொடி இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுதந்திர தினத்தை ஒட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள கொடிக்கம்பம் மட்டும் வெறிச்சோடி இருப்பது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.