புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியது நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாற்றுத்திறனாளி மாணவி, தனக்கு பிறவியிலேயெ இரண்டு கால்களும் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும், தன்னால் நடக்க முடிந்தால் தனது கல்வி மேம்படும் என்றும் வீடியோ வெளியிட்டு உதவி கோரியிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், அந்த மாணவியை நேரில் சந்தித்து, கால்களோடு பொருத்தி நடக்கும் செயற்கை இணைப்பானை வழங்கி உதவினார்.