சென்னை - கொடுங்கையூர்
ஆபாசப் படங்களுக்கு அடிமையான இளைஞர்...
ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை கொலை...
ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்...
அத்தையை குத்தி கொன்ற இளைஞர்...
நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டிய இன்டர்நெட்ட இன்னைக்கு பல இளைஞர்கள் தப்பா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இங்கயும் அப்படிதான் ஒருத்தர் இண்டர் நெட்டால ஆபாச படங்களுக்கு அடிமையாகி அதுலயே மூழ்கி கிடந்திருக்காரு. அதோடு விளைவு ஒரு கொடூர கொலை.
Pkg
எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் கொடுங்கையூர் பகுதி அன்று இரவு மரண பீதியில் உறைந்து கிடந்தது.
வேலை செய்த களைப்பில் இரவின் மடியில் இளைப்பாற எண்ணிய அந்த பகுதிவாசிகளுக்கு அன்றய இரவு தூக்கம், இப்படி ஒரு கொடூரத்தால் கலைந்து போகும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வீட்டுக்குள் தான் நடந்திருக்கிறது அந்த பயங்கரம். வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மகனுக்கு காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி.
தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தாயின் உடல் அவரை உலுக்கி போட்டிருக்கிறது.
அவரின் கதறலை கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். நடந்திருப்பது ஒரு கொடூர கொலை. தலை, கழுத்து என உடலின் பல இடங்களில் பலமான காயங்கள் இருந்தன. அதோடு வீட்டில் எந்த பொருளும் கொள்ளை போகவில்லை. நடந்திருக்கும் கொலை வேறு நேக்கத்திற்காக என்று தெள்ளத்தெளிவாக போலீசாருக்கு தெரிந்துவிட்டது.
சடலத்தை உடற்கூராய்விற்காக அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
கொல்லப்பட்டவர் மெர்லின் வேளாங்கண்ணி. சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர். 55 வயதான மெர்லின் வேளாங்கண்ணிக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கணவன், பிள்ளைகள் மூவரும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டால் இரவு தான் வீடு திரும்புவார்கள். மெர்லின் வேளாங்கண்ணி வீட்டு வேலைகளை கவணித்து கொண்டு, பகல் பொழுதில் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பது வழக்கம்.
அந்த தனிமையை பயன்படுத்தி கொண்டு தான் தற்போது மெர்லின் வேளாங்கண்ணி வீட்டுக்குள்ளேயே கொடூரமாக குத்தி கொல்லப்பாட்டிருக்கிறார்.
போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சுற்று வட்டார பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது தான் இரண்டு இளைஞர்கள் மெர்லின் வேளாங்கண்ணி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்திருக்கிறது. உடனே போலீசார் சந்தேகத்திற்குறிய அந்த நபர்களின் புகைப்படங்களை கட்டி விசாரித்திருக்கிறார்கள்.
அவர்கள் வேறு யாரும் இல்லை பக்கத்து தெருவில் வசித்து வந்த அகஸ்டினும் அவரது நண்பர் சாலமனும்.
அகஸ்டின், மெர்லின் வேளாங்கண்ணியின் சொந்த தம்பி மகன். உடனே போலீசார் அகஸ்டினை மடக்கி பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அனைத்து உண்மைகளும் அம்பலமாகியிருக்கு.
ஆம்… அகஸ்டின் சொந்த அத்தையையே கொடூரமாக கொலை செய்திருக்கிறார். நடந்த பயங்கரத்துக்கு காரணம் காமம்..!
21 வயதான அகஸ்டின் ஐடிஐ படித்து விட்டு தனியார் நிறுவணத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஆபாச படங்களுக்கு அடிமையான அகஸ்டின் அடிக்கடி செல்போனில் நீல படம் பார்ப்பது வழக்கம்.
நாளாக நாளாக காம வெறி அவரது கண்ணை மறைத்திருக்கிறது. தன்னுடைய பாலியல் வக்கிரத்துக்கு தீனிபோட நினைத்த அகஸ்டின் அத்தையிடமிருந்தே அதை ஆரம்பிக்க நினைத்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று நண்பரோடு மெர்லின் வேளாங்கண்ணி வீட்டுக்கு வந்த அகஸ்டின் சகஜமாக பேசியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அத்தையிடமே அத்து மீறியிருக்கிறார். இதனால் பதறிப்போன மெர்லின் வேளாங்கண்ணி அகஸ்டினை கண்டித்ததோடு, அவரது அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்த, நடந்ததை மறைக்க அத்தையையே தீர்த்துகட்ட நினைத்திருக்கிறார்.
நண்பர் சாலமனின் உதவியோடு மெர்லின் வேளாங்கண்ணியை தாக்கி, சுவரில் தலையை மோதி நிலை குலைய செய்திருக்கிறார்.
பிறகு வீட்டிலிருந்த ஸ்குரு டிரைவரால் கழுத்திலேயே சரமாரியாக குத்தி கொன்று விட்டு இருவரும் தப்பி சென்றிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அகஸ்டினையும் சாலமனையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
தவறான பழக்கம் என்றுமே நம்மை மோசமான வழிக்கே இட்டும் செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.