புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தி வயநாடு மக்களுக்கு வசூல் செய்த, ரூ43,200 யை டீக்கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார், கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பல இக்கட்டான காலகட்டங்களில் பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் மொய் விருந்து நடத்தி நிதி அளித்து வந்துள்ளார். அதேபோன்று தற்போது வயநாடு பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தனது டீக்கடைகளில் மொய் விருந்து நடத்தி அதன்மூலம் கிடைத்த 43 ஆயிரத்து 200 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.