புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணி ராஜ் என்பவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார். கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும் எந்த பணியையும் அவர் செய்யாமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் அவர் முறையாக பள்ளிக்கு வருவது கிடையாது என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.