"தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி..." -ஊரே வியந்த சீர் வரிசை..! மேளதாளத்துடன் அசரவைத்த தாய் மாமன்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, காதணி விழாவுக்கு, தாய் மாமன்கள் 15 மாட்டு வண்டிகளில் சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்தது கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - ஜீவிதா தம்பதியின் அர்ஷவர்தினி, சிவநந்தினி ஆகியோருக்கு காதணி விழா, அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, அவர்களது தாய்மாமன்கள் மண்ணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர், குதிரையில் முன்னால் வர, மேளதாளங்களுடன் 15 மாட்டு வண்டிகளில் சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். பின்னர், தாய்மாமன்கள் தலைமையில், சிறுமிகளுக்கு காதணி விழா நடைபெற்றது.