வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. ஆசையாக வந்தவருக்கு அல்வா கொடுத்த பெண்

Update: 2024-09-22 15:59 GMT

புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் பணிபுரியும் தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உல்லாசமாக இருக்க பெண் தேவையா என்ற குறுஞ்செய்தி வந்ததாகவும், அதில் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பெண் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண்ணை தேர்வு செய்தால் முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பெண் கூறியதாகவும், அதைநம்பி ஜி-பேயில் பணத்தை அனுப்பி முத்தியால்பேட்டை பகுதியில் காத்திருந்ததாகவும் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் 5 மணி நேரமாக அங்கு யாரும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் போலீசார், விக்னேஷை ஏமாற்றிய கடலூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றியதும், கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் யாராவது ஏமாற்றப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்