சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவருக்கு திருமணமாகி ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நண்பர்கள் அழைத்ததாக கூறி அதிகாலை 3 மணியளவில் வெளியே சென்ற அருண்பாண்டியன், வீட்டின் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.