பிரச்சினை மேல் பிரச்சினை...அடம் பிடிக்கும் கர்நாடகாகளத்தில் குதித்த விவசாயிகள்

Update: 2023-08-29 17:35 GMT

பிரச்சினை மேல் பிரச்சினை...

அடம் பிடிக்கும் கர்நாடகா

களத்தில் குதித்த விவசாயிகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக மாநில விவசாயிகள், கே.ஆர்.எஸ். அணை முன்பாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, நேற்று நடைபெற்ற ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தினசரி ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில், மண்டியா மாவட்ட விவசாயிகள் கே.ஆர்.எஸ். அணை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தில் முதல்வர் சித்தராமைய்யாவும், நீர்வளத்துறை அமைச்சர் பி.கே.சிவக்குமாரும் மௌனம் காப்பதாக கூறி, வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அணையில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்ததால், அதிக அளவில் லீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் கர்நாடக விவசாய சங்கங்களுடன் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தற்போதைய சூழலில் அணையில் போதிய நீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்