``ரூ.4.5 லட்சம் வாங்கிட்டு மூளைச்சாவா?'' - பிரைவேட் ஹாஸ்பிடலை அதிரவிட்ட இளைஞர் உறவுகள்
மதுரையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த இளமாறன் என்பவர் மின்விசிறி பழுது பார்த்த போது கீழே தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டு மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்
மேல் சிகிச்சைக்காக மதுரை குருவிக்காரசாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிசிக்சை செய்ய வேண்டி நான்கரை லட்சம் ரூபாய் வரை
பெற்று கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பின்னர் இளமாறன் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து இளமாறனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.