குடிக்க கூட நீரின்றி தவிக்கும் பாவப்பட்ட நோயாளிகள்.. மருத்துவமனையில் அவலம் - வெளியான வீடியோ
அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக தண்ணீர் இன்றி நோயாளிகள் அவதிப்பட்டு வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக குடிக்க மற்றும் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக நோயாளிகள் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது