டெம்பரவரி ஊழியர் உயிர் பறித்த மின்கம்பம்.. தெரிந்தே செய்தாரா பர்மனென்ட் ஊழியர்?

Update: 2024-08-23 09:31 GMT

பூந்தமல்லி அருகே மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமழிசை மடவிளாகம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, 2 வயதில் குழந்தை உள்ள நிலையில், சிப்காட் பகுதியில் மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர் மோகன் என்பவருடன் பழுது நீக்க சென்றுள்ளார். அப்போது மின்கம்பத்தில் மோகன் ஏறாமல் போதிய அனுபவம் இல்லாத நரேந்திரனை மின் கம்பத்தில் ஏற கூறியதாக பேசப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நரேந்திரன் தூக்கி வீசப்பட்ட நிலையில், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்