"என்னமா இது...வீர வசனம் பேசுன நீங்களா இந்த கேவலமான காரியத்த காரியத்த பண்ணது" - வைரல் வீடியோ
பொன்னேரி அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட டிக்டாக் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்றல் சாந்தி. இவர் டிக்டாக் செயலில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். கஞ்சி குடித்தாலும் கௌரவமா குடிக்கணும் என்ற வசனங்களுடன், பல பாடல்கள், நடனம் என டிக்டாக்கில் பிரபலமாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் காந்தி ஜெயந்தி நாளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றதாக தென்றல் சாந்தி பொன்னேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 7 ஆயிரத்து 500ரூபாய் மதிப்பிலான 50மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் தென்றல் சாந்தியின் டிக்டாக் வீடியோக்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.