பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம் -3 பேருக்கு விழுந்த சரமாரி அடி - கதறும் தங்கை..
பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாயை அடைத்து வைத்த தனி நபர், தட்டி கேட்டவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பராம்பாளையம் பகுதியில் நித்திய பிரியா என்பவரது வீட்டின கழிவுநீர் குழாயை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாவா என்பவர் துணியை வைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கழிவுநீர் குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த பாவா அவர்களை தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.