"வெளியே சொன்னால் மூச்சு இருக்காது" - 2 மாத பழக்கத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சம்பவம்
வெளியே சொன்னால் மூச்சு இருக்காது" - 2 மாத பழக்கத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சம்பவம்
திருச்சியில் நண்பர் போல பழகி கூலிப்படை மூலம் கடத்திச்சென்று 16 லட்சம் பணம் பறிக்கப்பட்டதாக தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கேகே நகர் பகுதியில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பாலு, கணேசன் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இருவரும் ஆட்களை ஏவி, தன்னை கடத்தி வைத்துவிட்டு காசோலை மூலமாகவும், ஏடிஎம் மூலமாகவும் சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துவிட்டதாக கே.கே. நகர் காவல்நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உரிய ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.