3 விஷயத்தை ஹயிலைட் செய்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த மோடி

Update: 2024-09-24 02:17 GMT

உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் தொடர்ந்து தீவிர அச்சுறுத்தலாக உள்ளது என்று ஐ.நா சபையின் எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையின் எதிர்க்காலத்திற்கான உச்சி மாநாட்டில் உரையாற்றினார். மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் 250 மில்லியன் மக்களை வருமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், நிலையான வளர்ச்சிக்கான வெற்றி அனுபவத்தை தெற்கு உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக கூறினார். உலக நன்மைக்காக இந்தியா தனது டிஜிட்டல் பொது கட்டமைப்ப பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்தியாவின் உறுதிமொழி என்று மோடி குறிப்பிட்டார். உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பிரதர் மோடி, மனிதகுலத்தின் வெற்றி போர்க்களத்தில் அல்ல என்றும், நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்