பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 297 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கடந்த 2014ம் ஆண்டுமுதல் மீட்கப்பட்ட பழங்கால பொருட்களின் எண்ணிக்கை 640ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 578 பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, கலாச்சார சொத்துக்கள் கடத்தப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடி வருவதாகவும், இந்தியாவிடம் 297 விலைமதிப்பற்ற பழங்கால பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதற்காக, அதிபர் பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.