"சமூக நீதிக்கு எதிரானது..!"அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு..! வெளியான பரபரப்பு அறிக்கை | PMK
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் அரசின் முடிவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவிரையாளர் நியமனத்தை மேற்கொள்வது, சமூகநீதிக்கு எதிரானது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.